டில்ஷான் மதுசங்க உலக கிண்ணத்திலிருந்து வெளியேற்றம்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுசங்க தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாத நிலையில் அணியிலிருத்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று அவருக்கு MRI பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இந்த உபாதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக கிண்ண 20-20 தொடரிலிருந்து அவர் விலகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் ப்ரமோட் மதுஷன் அவருக்கு பதிலாக விளையாடுகிறார். லஹிரு குமாரவும் அணியில் காணப்படும் நிலையில், பினுர பெர்னாண்டோ இலங்கை அணியோடு இணைக்கப்படுவார் என நம்பப்படுகிறது. மேலதிகமான வீரர்களுக்கான மூவரில் பினுர பெர்னாண்டோ இடம் பிடித்துள்ளார்.

Social Share

Leave a Reply