உலக கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றின் முதற் போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியா அனியினை வெற்றி பெற்றது.
ICC T 20 உலக கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றின் முதற் போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியா அனியினை வெற்றி பெற்றது. போட்டிகளை நடாத்தும் அவுஸ்திரேலியா அணி எதிர்பாராதா மோசமான தோல்வியினை சந்தித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி டெவோன் கொன்வே மற்றும் பின் அலன் ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. இதில் டெவோன் கொன்வே 91 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் எவரும் குறிப்பிட்டு கூறுமளவுக்கு பிரகாசிக்கவில்லை.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியான விக்கெட்களை இழந்தமையினால் 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணி சார்பாக ரிம் சௌதீ மிகவும் சிறப்பாக பந்துவீசினார். ஆரம்ப விக்கெட்களை தகர்த்து கொடுத்தார்.
இந்த வெற்றி நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாதற்கு கைகொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஓட்ட நிகர சராசரி வேகம் மிகவும் அதிகரித்துள்ளது.
முழுமையான ஸ்கோர் விபரம்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
டேவிட் வோர்னர் | BOWLED | ரிம் சௌதீ | 05 | 06 | 01 | 00 |
ஆரோன் பிஞ்ச் | பிடி – வில்லியம்சன் | மிட்செல் சென்டனர் | 13 | 11 | 01 | 00 |
மிச்செல் மார்ஷ் | பிடி – ஜேம்ஸ் நீஸாம் | ரிம் சௌதீ | 16 | 12 | 02 | 01 |
க்ளென் மக்ஸ்வெல் | BOWLED | இஸ் சோதி | 28 | 20 | 03 | 01 |
மார்கஸ் ஸ்டோனிஸ் | பிடி – க்ளன் பிலிப்ஸ் | மிட்செல் சென்டனர் | 07 | 14 | 00 | 00 |
ரிம் டேவிட் | பிடி- ஜேம்ஸ் நீஸாம் | மிட்செல் சென்டனர் | 11 | 08 | 00 | 01 |
மத்தியூ வேட் | பிடி- டெவன் கொன்வே | லூகி பெர்குசன் | 02 | 04 | 00 | 00 |
பட் கமின்ஸ் | பிடி – டெவன் கொன்வே | ரிம் சௌதீ | 21 | 18 | 02 | 01 |
மிட்செல் ஸ்டார்க் | BOWLED | ட்ரென்ட் போல்ட் | 04 | 07 | 00 | 00 |
அடம் சம்பா | BOWLED | ட்ரென்ட் போல்ட் | 00 | 02 | 00 | 00 |
ஜோஸ்ஹெசல்வூட் | 01 | 01 | 00 | 00 | ||
உதிரிகள் | 03 | |||||
ஓவர் 17 1 | விக்கெட் 10 | மொத்தம் | 111 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ட்ரென்ட் போல்ட் | 04 | 00 | 24 | 02 |
ரிம் சௌதீ | 2.1 | 00 | 06 | 03 |
மிட்செல் சென்டனர் | 04 | 00 | 31 | 03 |
லூகி பெர்குசன் | 03 | 00 | 20 | 01 |
இஸ் சோதி | 04 | 00 | 29 | 01 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பின் அலென் | Boweld | ஜோஷ் ஹசல்வுட் | 42 | 16 | 5 | 3 |
டெவொன் கொன்வே | 92 | 58 | 7 | 2 | ||
கேன் வில்லியம்சன் | L.B.W | mlk; rk;gh | 23 | 23 | 1 | 1 |
க்ளென் பிளிப்ஸ் | பிடி – ஜோஷ் ஹசல்வுட் | ஜோஷ் ஹசல்வுட் ; | 12 | 10 | 2 | 0 |
ஜேம்ஸ் நிஷாம் | 26 | 13 | 0 | 2 | ||
உதிரிகள் | 5 | |||||
ஓவர் 20 | விக்கெட் 3 | மொத்தம் | 200 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மிச்செல் ஸ்டார்க் | 04 | 00 | 36 | 00 |
ஜோஷ் ஹசல்வுட் | 04 | 00 | 41 | 02 |
பட் கமின்ஸ் | 04 | 00 | 46 | 00 |
மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் | 04 | 00 | 38 | 00 |
அடம் சம்பா | 04 | 00 | 39 | 01 |