இந்தியா, பாகிஸ்தான் இறுதிப் போட்டி சாத்தியமா?
ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி இன்று அவுஸ்திரேலியா, அடிலயட்டில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இன்று வெற்றி பெறுமணி பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
இந்தியா அணிக்கு தினேஷ் கார்த்திக் திரும்புவார் என நம்பப்படுகிறது. ரிஷாப் பான்ட் விளையாட மாட்டார். இங்கிலாந்து அணிக்கு இரன்டு உபாதை சிக்கல்கள் காணப்படுகின்றன. டாவிட் மலான் மற்றும் மார்க் வூட் ஆகியோர் உபாதையடைந்துள்ளனர். இவர்கள் விளையாடுவது தொடர்பில் இறுதி நேரத்தில் முடிவெடுக்கப்படுமென நம்பப்படுகிறது.
இரு அணிகளும் நீண்ட துடுப்பாட்ட வரிசையினை கொண்டுள்ளன. இதன் காரணமாக ஓட்டங்கள் அதிகமாக பெறப்படுமென எதிர்பார்க்கபப்டுகிறது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சும் நீண்டது. அதன் காரணமாக அவர்கள் பந்துவீச்சில் இந்தியா அணியினை அச்சுறுத்தும் வாய்ப்புகள் காணபப்டுகின்றன. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அவர் இன்று மாற்றங்களை செய்தாலே இந்தியா அணி வெற்றி பெறுமென நம்பப்படுகிறது.
இலங்கை நேரப்பபடி பிற்பகல் 1.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.