வவுனியா நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம் இன்று(14.11)ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை தலைவர் இ. கெளதமன் தலைமையில் இன்று நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதன் போது சகல உறுப்பினர்களும் முன்வைக்கப்பட்ட பாதீட்டினை ஏற்றுக்கொண்டதனை தொடர்நது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த வருடமும் வவுனியா நகரசபையின் பாதீடு எதிர்ப்புகளின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.