காற்பந்து உலக கிண்ணம் ஆரம்பித்தது. எகுவாடர் அணி வெற்றி

2022 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டி தொடர் நேற்று(20.11) கட்டாரில் ஆரம்பித்தது. கோலா கல நிகழ்வுகளுடன் உலக கிண்ணம் உத்தியோகபூர்வமாக ஆர்மபித்து வைக்கப்பட்டது.

இந்த வருட முதற் போட்டி கட்டார் மற்றும் எகுவாடர் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் எகுவாடர் அணி 2-0 என வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் தலைவர் வலன்சியா இரு கோல்களையும் பெற்றுக்கொடுத்தார்.

போட்டி ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் கிடைத்த பனால்டி உதையினை வலன்சியா தவறவிட்டார். இருப்பினும் 16 ஆவது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த பனால்டியினை கோலாக மாற்றினார். 31 ஆவது நிமிடத்தில் மிகவும் சிறப்பான கோல் ஒன்றினை தலையினால் அடித்தார்.

போட்டிகளை நடாத்தும் கட்டார் நாடு போராடி விளையாடிய போதும், எகுவாடர் அணிக்கு சவால் விடுக்கும் நிலையில் விளையாட்டு அமையவில்லை.

இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. முதற் போட்டி மாலை 6.30 இற்கு இங்கிலாந்து, ஈரான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி இரவு 9.30 இற்கு நெதர்லாந்து, செனகல் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

நள்ளிரவு 12.30 இற்கு அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply