காற்பந்து உலக கிண்ண தொடரின் குழு A இற்கான இன்றைய இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி கடுமையாக போராடி செனகல் அணியினை வெற்றி பெற்றது.
இரு அணிகளுமே ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி வந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 84 ஆவது நிமிடத்தில் தண்ட உதையினை கொடி கக்போ தலையால் இடித்து சிறப்பான கோல் ஒன்றினை நெதர்லாந்து அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.
இது அவரின் முதலாவது உலக கிண்ண கோலாகும்.
போட்டி நிறைவடைய ஓரிரு செக்கன்கள் மாத்திரம் மீதமிருந்த வேளையில், செனகல் அணியின் கோல் காப்பாளர் தடுத்த பந்தினை டேவி க்ளாஸான் கோலாக மாற்றினார்.
போட்டியின் நிறைவில் நெதர்லாந்து அணி 2-0 என வெற்றி பெற்றது.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | நெதர்லாந்து | 01 | 01 | 00 | 00 | 03 | 02 | 02 | 00 |
| 2 | எகுவாடர் | 01 | 01 | 00 | 00 | 03 | 02 | 02 | 00 |
| 3 | செனகல் | 01 | 00 | 01 | 00 | 00 | -02 | 00 | 02 |
| 4 | கட்டார் | 01 | 00 | 01 | 00 | 00 | -02 | 00 | 02 |