இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ,முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டித்தொடர் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி பலமான ஓட்ட எண்ணிக்கை ஒன்றை பெற்றுள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கை இந்த மைதானத்தில் வெற்றி பெறக்கூடிய சிறந்த ஓட்ட எண்ணிக்கையாக கருதப்படுகிறது.
50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இப்ராஹிம் ஷர்டான் சிறப்பாக துடுப்பாடி 106 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவரும் ரஹ்மனுள்ள குர்பாஸூம் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா ஜோடி 118 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட்டுக்காக பகிர்ந்து கொண்டது. ரஹ்மத் ஷா அரைச்சதத்தை பூர்த்திசெய்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்ட வீரர்களை அச்சறுத்தும் அளவுக்கு அமையவில்லை. கடினமான பந்துகளை சிறப்பான முறையில் எதிர்கொண்டு துடுப்பாடினார்கள். அதிரடி துடுப்பாட்டங்களுக்கு செல்லாமல் நிதானமாக ஓட்டங்களை ஓடி பெற்றனர். இதன் காரணமாகவே ஓட்ட எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உயர்ந்தது.
வனிந்து ஹஸரங்க முதல் விக்கெட்டினை கைப்பற்றி கொடுத்தார். ஆனால் மற்றைய பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மோசமாகவே பந்துவீசினார்கள். இறுதியில் ஹசரங்க 2 விக்கெட்களையும், லஹிரு குமார, மஹீஸ் தீக்ஷண, தனஞ்சய லக்ஷான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுள்ளா குர்பாஸ் | L.B.W | வனிந்து ஹசரங்க | 53 | 55 | 9 | 0 |
| இப்ரஹிம் சட்ரன் | பிடி – வனிந்து ஹசரங்க | மஹீஸ் தீக்ஷண | 106 | 120 | 11 | 0 |
| ரஹ்மத் ஷா | பிடி – குசல் மென்டிஸ் | லஹிரு குமார | 52 | 64 | 2 | 0 |
| நஜிபுல்லா சட்ரன் | பிடி – குசல் மென்டிஸ் , | வனிந்து ஹசரங்க | 42 | 25 | 5 | 1 |
| குல்படின் நைப் | பிடி – வனிந்து ஹசரங்க | தனஞ்சய லக்கஷான் | 22 | 24 | 2 | 1 |
| ரஷீத் கான் | Run Out | 04 | 05 | 0 | 0 | |
| மொஹமட் நபி | பிடி – தனஞ்சய லக்கஷான் | கசுன் ரஜித | 15 | 13 | 1 | 0 |
| ஹஸ்மதுல்லா ஷஹதி | Ruon Out | 02 | 02 | 0 | 0 | |
| முஜீப் உர் ரஹ்மான் | 01 | 01 | 0 | 0 | ||
| யாமின் அஹமட்கஷாய் | 00 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 08 | மொத்தம் | 294 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கசுன் ரஜித | 10 | 00 | 56 | 01 |
| தனஞ்சய லக்கஷான் | 06 | 00 | 43 | 01 |
| லஹிரு குமார | 08 | 00 | 54 | 01 |
| தஸூன் ஷானக | 03 | 00 | 19 | 00 |
| வனிந்து ஹசரங்க | 10 | 00 | 42 | 02 |
| மஹீஷ் தீக்ஷன | 10 | 00 | 62 | 01 |
| தனஞ்சய டி சில்வா | 03 | 00 | 14 | 00 |