விறு விறுப்பான கட்டத்தில் IPL – நேற்று, இன்று

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடர்ந்தும் அடுத்த சுற்று வாய்ப்பினை தக்கவைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அடுத்த சுற்றுக்கு தெரிவாவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியும் நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ், தோல்விடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகும். ராஜஸ்தான் ரோயல்ஸ் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. இதில் வெங்கடேஷ் ஐயர் 67(47) ,ராகுல் திருப்பதி 34(26) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆர்ஷிப் சிங் 3 (4-32), ரவி பிஷொனி 2 (4-22) கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்களை 168 இழந்து ஓட்டங்களை பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் 67(55) ஓட்டங்களையும்,மயங் அகர்வால் 40(27) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

விறு விறுப்பான கட்டத்தில் IPL - நேற்று, இன்று

Social Share

Leave a Reply