கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரின் முன்னோடி காலிறுதி சுற்றின் போலந்து, பிரான்ஸ் அணிகளுக்கியிடலான போட்டியில் பிரான்ஸ் அணி 3-1 என வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
நடப்பு சம்பியனான பிரான்ஸ் அணி மூன்று தடவைகள் தொடர்ச்சியாக காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது. ஒன்பதாவது தடவையாக அவர்கள் தெரிவாகியுள்ளனர்.
86 ஆம் ஆண்டுக்கு பின்னர் முன்னோடி காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய போலந்து அணி காலிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
பிரான்ஸ் அணி போலாந்து அணியினை மிகவும் இலகுவாக வெற்றி பெற்றது. ஆரம்பம் முதலே பிரான்ஸ் பக்கமாக போட்டி சென்றது. ஒலிவியர் ஜிரூட் 44 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலமாக பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. இந்த கோலின் மூலமாக ஜிரூட் பிரான்ஸ் அணிக்காக கூடுதலான கோல்களை ஆடித்தவராக மாறியுள்ளார்.
கிலான் மாப்பே 74 மற்றும் 92 ஆவது நிமிடங்களில் மிகவும் சிறப்பான இரண்டு கோல்களை பெற்றுக்கொடுத்தார்.
போட்டி நிறைவடைய சில செக்கன்கள் மீதமிருந்த நிலையில் போலந்து அணிக்கு கிடைத்த பனால்டியினை கோலாக மாற்றினார் லெவண்டொஸ்கி.