பங்களாதேஷிடம் தோற்ற இந்தியா அணி

பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரின் முதற் போட்டியில் இந்தியா அணியை பங்காதேஷ் அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி ஆரம்பத்திலே இருந்தே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. இந்தியா அணி 41.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்றது. இதில் லோகேஷ் ராஹுல் 73(70) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களையும், எபடொட் ஹொசைன் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பலமாக இருந்த இந்தியா அணி இந்த போட்டியில் ஆரம்பத்திலே இருந்தே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்ததே இந்த தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனாலும் இந்தியா அணி பங்களாதேஷ் அணிக்கு கடும் சவாலை வழங்கியது.

பதிலுக்கு துடுப்படியா பங்களாதேஷ் அணி 46 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. இதில் லிட்டன் டாஸ் 41(63) ஓட்டங்களையும், மெஹிடி ஹசான் மிராஸ் ஆட்டமிழக்காமல் 38(39) ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசான் 29(38) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 3 விக்கெட்களையும், குல்தீப் சென், வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், தீபக் சஹார், ஷர்டூல் தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டனர்.

இந்த போட்டியின் நாயகனாக மெஹிடி ஹசான் மிராஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி இம்மாதம் 07 ஆம் திகதி 11.30 மிர்பூரில் நடைபெறவுள்ளது.

வி. பிரவிக்
தரம் – 04

Social Share

Leave a Reply