பனால்டியில் நிறைவடைந்த முதற் போட்டி

உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரின் முன்னோடி காலிறுதி போட்டியில் குரேஷியா அணி ஜப்பான் அணியினை 4-2 என்ற கோலடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

குரேஷியா, ஜப்பான் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜப்பான் அணி சார்பாக 43 ஆவது நிமிடத்தில் டெய்ஷன் மயேடா கோலடடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார். 55 ஆவது நிமிடத்தில் இவான் பெரிசிச் அடித்த கோல் மூலமாக போட்டி சமநிலை அடைந்தது.

மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் இரு அணிகளினாலும் மேலதிக கோலை பெற முடியவில்லை. டை பிரேக்கர் எனும் பனால்டி உதையில் 3-1 எனும் அடிப்படையில் குரேஷியா அணி வெற்றி பெற்றது.

ஜப்பான் அணி இன்று மிகவும் சிறப்பாக விளையாடியது. பலமான முக்கிய ஐரோப்பியா அணிகளுடன் ஜப்பான் அணி விளையாடி அனுபம் பெறுமானால் அவர்கள் மேலும் பலமான அணியாக வருவார்கள்.

ஜப்பான் அணியின் மூன்று பனால்டி கோல் முயற்சிகளையும் குரேஷியா கோல் காப்பாளர் டொமினிக் லிவாகொவிச் தடுத்தார்.

ஜப்பான் அணி காலிறுதிப் போட்டிக்கு தெரிவானதில்லை என்பதனை மீண்டும் உறுதி செய்துள்ளது. குரேஷியா அணி மூன்றாவது தடவையாக காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

பிரேசில், தென் கொரியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுமணியுடன் குரேஷியா அணி காலிறுதி போட்டியில் விளையாடவுள்ளது.

Social Share

Leave a Reply