லங்கா, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(06.12) இரண்டாவது போட்டியில் கண்டி பல்கொன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. மழை ஆரம்பித்துள்ள நிலையில் அதன் காரணமாக கொழும்பு அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
அணி விபரம்
கொழும்பு ஸ்டார்ஸ்
அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, சரித் அசலங்க, ரவி போபரா, டினேஷ் சந்திமால், பென்னி ஹோவல், சீக்குகே பிரசன்னா, டொமினிக் ட்ரேக்ஸ், கீமோ பௌல், முதித்த லக்ஷான், சுரங்க லக்மால்.
கண்டி பல்கொன்ஸ்
வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, பாபியன் அலன், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சகூர் கான், அஷேன் டானியல்