லங்கா, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(06.12) இரண்டாவது போட்டியில் கண்டி பல்கொன்ஸ் அணி கொழும்பு ஸ்டார்ஸ் அணியை 109 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 200 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கொழும்பு அணி 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அஞ்சலோ மத்தியூஸ் தனித்து நின்று 26 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். மறு புறமாக அடுத்தடுத்து விக்கெட்கள் வீழந்தன. இறுதி நேர துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டம் மூலம் ஓரளவு ஓட்டங்கள் பெறப்பட்டன.
வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சு கொழும்பு அணியினை அச்சறுத்தியது. ஹட்ரிக் சாதனை படைத்தது 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடிப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி 20 ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றது.
கண்டி அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தமையினால் இந்த ஓட்ட எண்ணிக்கயினை பெறக்கூடியதாக இருந்தது. கண்டியின் சிறந்த ஆரம்பத்துக்கு கொழும்பு களத்தடுப்பாளர்களே காரணம். இலகுவான பிடிகள் பல நழுவ விடப்பட்டமையே இந்த ஆரம்பத்துக்கு காரணமாக அமைந்து.
பிடிகள் நழுவ விடப்பட அன்றே பிளட்சர், பத்தும் நிசங்க நிதானம் கலந்த அதிரடி நிகழ்த்தி ஓட்டங்களை உயர்த்தினர். அன்றே பிளட்சர் அதிரடியாக துடுப்பாடி சதத்தினை பூர்த்தி செய்தார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| நிரோஷன் டிக்வெல்ல | Run Out | 05 | 04 | 1 | 0 | |
| அஞ்சலோ மத்தியூஸ் | பிடி – பாபியன் அலன் | வனிந்து ஹஸரங்க | 26 | 23 | 2 | 0 |
| சரித் அசலங்க | பிடி – அன்றே பிளட்சர் | கார்லோஸ் ப்ராத்வைட் | 01 | 02 | 0 | 0 |
| ரவி போபரா | பிடி – வனிந்து ஹஸரங்க | சகூர் கான் | 02 | 06 | 0 | 0 |
| டினேஷ் சந்திமால் | Bowled | வனிந்து ஹஸரங்க | 09 | 09 | 1 | 0 |
| பென்னி ஹோவல் | L.B.W | வனிந்து ஹஸரங்க | 00 | 01 | 0 | 0 |
| சீக்குகே பிரசன்ன | L.B.W | வனிந்து ஹஸரங்க | 00 | 01 | 0 | 0 |
| டொமினிக் ட்ரேக்ஸ் | பிடி – பத்தும் நிஸ்ஸங்க | பாபியன் அலன், | 18 | 22 | 2 | 0 |
| கீமோ பௌல் | Bowled | அஷேன் டானியல் | 22 | 15 | 1 | 2 |
| முதித்த லக்ஷான் | 06 | 03 | 1 | 0 | ||
| சுரங்க லக்மால் | L.B.W | பாபியன் அலன் | 00 | 01 | 0 | 0 |
| உதிரிகள் | 01 | |||||
| ஓவர் 14.3 | விக்கெட் 10 | மொத்தம் | 90 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| சகூர் கான் | 02 | 00 | 08 | 01 |
| கார்லோஸ் ப்ராத்வைட் | 03 | 00 | 22 | 01 |
| இசுரு உதான | 02 | 00 | 11 | 00 |
| வனிந்து ஹஸரங்க | 03 | 00 | 14 | 04 |
| சாமிக்க கருணாரட்டன | 02 | 00 | 12 | 00 |
| அஷேன் டானியல் | 02 | 00 | 22 | 01 |
| பாபியன் அலன் | 0.3 | 00 | 01 | 02 |