சிறுநீரக சர்ச்சை – சம்மந்தப்பட்டவர்களுக்கு பயண தடை

அண்மையில் நடைபெற்ற தனியார் வைத்தியசாலை சிறீநீரக மோசடியுடன் சம்மந்தப்பட்ட சிரேஷ்ட வைத்தியவர் மற்றும் தனியார் வைத்தியசாலையின் ஆறு பணிப்பளர்கள் வெளிநாடு செல்வதற்க்கு நீதிமன்றம் நேற்று(06.12)தடை விதித்துள்ளது.

கொழும்பு, பொரளை தனியார் வைத்தியசாலையில் நடைபெற்ற சிறுநீரக மாற்று மோசடியுடன் சம்மந்தப்பட்ட முகவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரை 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த நீதிமன்ற விசாரணையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பஷீர் மொஹமட் ரஜாப்டீன் எனும் நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொரல்லை, வெஸ்டேர்ன் வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்தில் 52 சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும், வறுமையில் உள்ள மக்களிடம் 50 இலட்சம் ரூபா முதல் 1 கோடி ரூபா வரையிலான பணத்திற்கு இந்த சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது முன்னிலையான கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்காக ஆஜரான சிரேஷ்ட வழக்கறிஞர் திலீப பீரிஸ் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

இந்த சிறுநீரக மாற்றுக்காக 6 பேருக்கு பணம் வழங்கவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஒருவருக்கு சிறுநீரக மாற்றினை செய்வதற்காக 95 இலட்சம் ரூபா பணம் வழங்குவதாக ஒப்பந்தம் பேசப்பட்டதாகவும், ஆனால் பணத்தினை வழங்கவில்லை எனவும் பிறிதொரு நபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வலயமைப்புகளுக்கு சம்மந்தம் உள்ளதா என விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply