ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் நேற்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கொம்பனி வீதி, கியூ வீதியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அனுசனின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஜனனம் அறக்கட்டளையின் அனுசரணையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அன்னதான நிகழ்வில் ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திர, ஜனனம் அறக்கட்டளை தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் டி. எஸ் சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி தலைவருமான விநாயகமூர்த்தி ஜனகன், ஐக்கிய இளைஞர் சக்தியின் உபதலைவரும், முல்லைத்தீவு இணைப்பாளருமான லக்சயன் முத்துக்குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.