தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேலுகுமார் MP கட்சியிலிருந்து இடை நீக்கம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினரும், பாரளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாகவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையினை அரசியல் குழு எடுக்குமெனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

“அரசை எதிர்த்து வாக்களிக்க தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி எம்பி வேலுகுமார் உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும்” என சமூக வலைத்தளத்தினூடாக மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருக்கும் பாரளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோருக்கிடையில் சீரான உறவு இருக்கவில்லை எனவும், வேலுகுமார் MP பிரிந்து செல்லவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களுக்க்குள் பேச்சுக்கள் அடிபட்டு வந்தன. மேலும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தனியான கட்சி ஒன்றினை ஆரம்பிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருவதாகும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் சில உறுப்பினர்கள் வேலுகுமாருக்கு ஆதரவாக இருப்பதாகவும் கண்டியிலுள்ள சில அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளளார்கள்.

தமிழர் தரப்பு அரசியல்களுக்குள் தொடர்ச்சியான பிரிவினைகள் ஏற்பட்டு வரும் நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி மூன்று அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் முற்போக்கு கூட்டணியாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பிளவு பின்னடைவுகளை ஏற்படுத்தும் நிலையை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரளுமன்ற உறுப்பினர் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக வாக்களித்தமைக்காக கட்சிலிருந்து நீக்கபப்ட்டார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 06 ஆகவிருந்த நிலையில் தற்போது 04 ஆக குறைவடைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற வரவு செலவு திட்ட வாக்களிப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்த்து வாக்களிக்காமல், வாக்களிப்பில் கலந்து கொள்ளமல் விலகியிருந்தார். இதற்காகவே அவர் கட்சியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

Social Share

Leave a Reply