லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கண்டி பல்கொன்ஸ் மற்றும் கோல் க்ளாடியேற்றஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமென எதிர்பார்க்கப்பட்ட கண்டி அணி தோல்வி ஒன்றினை சந்தித்துள்ளது.
153 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ அணி 20 ஓவர்களில் 07 விக்கட்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காலி அணியின் அபாரமான பந்துவீச்சு கண்டி அணியை கட்டுப்படுத்தியது. கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், காலி அணி போன்றே ஆரம்பத்தில் வேகமாக ஆட்டமிழந்தனர். பத்தும் நிஸ்ஸங்க நிதானமாக ஆரம்பம் ஒன்றை வழங்கிய போதும் அதுவும் தகர்க்கப்பட்ட நிலையில் கண்டி அணியின் தோல்வி உறுதியானது.
அஷேன் பண்டார மற்றும், சாமிக்க கருணாரட்ன ஆகியோர் ஓட்டங்களை பெற முயற்சித்த போதும் வெற்றி பெறக்கூடியளவில் போதுமானதாக அமையவில்லை.
16 ஆவது ஓவரில் நுவான் பிரதீப் வீசிய பந்து விக்கெட் காப்பாளர் அஸாம் கானின் தலையை தாக்கிய நிலையில் காயமடைந்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். நடக்க முடியாத நிலையில் தூக்கி செல்லப்பட்டவர், அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி – லக்ஷன் சன்டகன் | லக்ஷன் சன்டகன் | 29 | 32 | 2 | 0 |
| அன்றே பிளட்சர் | பிடி – அஸாம் கான் | நுவான் துஷார | 08 | 09 | 1 | 0 |
| கமிண்டு மென்டிஸ் | பிடி – நுவான் பிரதீப் | லக்ஷன் சன்டகன் | 09 | 14 | 1 | 0 |
| வனிந்து ஹஸரங்க | பிடி – இமாட் வசீம் | இமாட் வசீம் | 06 | 07 | 1 | 0 |
| அஷான் பிரியரஞ்சன் | Run Out | 01 | 01 | 0 | 0 | |
| அஷேன் பண்டாரா | 41 | 30 | 3 | 0 | ||
| கார்லோஸ் ப்ராத்வைட் | பிடி – குஷல் மென்டிஸ் | நுவான் துஷார | 04 | 09 | 0 | 0 |
| சாமிக்க கருணாரட்டன | Run Out | 32 | 15 | 5 | 0 | |
| இசுரு உதான | 03 | 03 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 141 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| இமாட் வசீம் | 04 | 00 | 15 | 01 |
| நுவான் துஷார | 04 | 00 | 26 | 02 |
| வஹாப் ரியாஸ் | 04 | 00 | 34 | 00 |
| நுவான் பிரதீப் | 03 | 00 | 34 | 00 |
| லக்ஷன் சன்டகன் | 04 | 00 | 19 | 01 |
| இப்திகார் அஹமட் | 04 | 00 | 17 | 02 |
அதிரடியாக சிறந்த வெற்றிகளை பெற்று வந்த கண்டி அணியின் இந்த தோல்வி யாரும் எதிர்பாரராத தோல்வியாக அமைந்துள்ளது.
லக்ஷன் சன்டகன் இறுக்கமாகவும், சிறப்பாகவும் பந்து வீசினார். மத்திய வரிசை வீரர்கள் வேகமாக ஆட்டமிழக்க கண்டி அணி தடுமாறிப்போனது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கோல் க்ளாடியேற்றஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
கண்டி அணியின் பந்துவீச்சு ஆரம்பம் முதலே மிகவும் அபாரமாக அமைந்தது. கார்லோஸ் ப்ராத்வைட்டின் விக்கெட்ககள் மூலம் தடுமாறியது காலி அணி. இசுரு உதானவும் அவருடன் இணைந்து சிறப்பாக பந்துவீசினார். 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களை காலி அணி பெற்றுக் கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுக்க டபாரே நிதானமாக துடுப்படி ஒரு பக்க விக்கெட்களை காப்பாற்றினார். 10 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த நுவனிது பெர்னாண்டோ, தனுக்க டபாரே ஜோடி சத இணைப்பாட்டம் மூலமாக காலி அணியை மீட்டெடுத்தது. இந்த இணைப்பாட்டமே காலி அணியின் வெற்றிக்கும் முக்கியமான காரணமாக அமைந்தது.
கண்டி அணி நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இது அவர்களது முதற் தோல்வி. காலி அணி நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்றுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| தனுக்க டபாரே | Run Out | 70 | 51 | 6 | 2 | |
| குசல் மென்டிஸ் | பிடி – பத்தும் நிஸ்ஸங்க | கார்லோஸ் ப்ராத்வைட் | 39 | 27 | 5 | 2 |
| லஹிரு உதான | Bowled | இசுரு உதான | 05 | 06 | 1 | 0 |
| அஸாம் கான் | L.B.W | கார்லோஸ் ப்ராத்வைட் | 01 | 03 | 0 | 0 |
| இப்திகார் அஹமட் | பிடி – பத்தும் நிஸ்ஸங்க | கார்லோஸ் ப்ராத்வைட் | 00 | 01 | 0 | 0 |
| நுவனிது பெர்னாண்டோ | L.B.W | இசுரு உதான | 56 | 50 | 5 | 0 |
| இமாட் வசீம் | 15 | 05 | 2 | 1 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 153 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| இசுரு உதான | 04 | 00 | 19 | 02 |
| கார்லோஸ் ப்ராத்வைட் | 04 | 01 | 17 | 03 |
| அஷான் பிரியரஞ்சன் | 01 | 00 | 17 | 00 |
| வனிந்து ஹஸரங்க | 04 | 00 | 23 | 00 |
| சகூர் கான் | 03 | 00 | 42 | 00 |
| சாமிக்க கருணாரட்டன | 04 | 00 | 33 | 02 |
அணி விபரம்
கோல் கிளாடியேட்டர்ஸ்
குஷல் மென்டிஸ், நுவனிது பெர்னாண்டோ, தனுக்க டாபரே, லஹிரு உதான, அஸாம் கான் , இப்திகார் அஹமட், இமாட் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், லக்ஷன் சன்டகன், அஸாம் கான்
கண்டி பல்கொன்ஸ்
வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சகூர் கான், அஷேன் டானியல், அஷான் பிரியரஞ்சன்
