இலங்கையின் பிரபல பாடகர் நிஹால் நெல்சன் தனது 76வது வயதில் காலமானார்.
இவரது மரண செய்தியை பிரபல பாடகர் கீர்த்தி பேஸ்குவல் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
1946ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி மொரட்டுவையில் பிறந்த நிஹால் நெல்சன், ராவத்தவத்தை மெதடிஸ் கல்லூரி மற்றும் மொரட்டு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
‘பைலா’ பாடல்களால் இசை மேடைகளை அலங்கரித்த நிஹால் நெல்சன், ‘காவடி பைலா’, ‘லஸ்சனட பிபுனு வனமல்’, போன்ற பல சிங்கள மொழி பாடல்களை பாடியுள்ளார்.