கொழும்பு அணிக்கு இலகு வெற்றி. யாழ் அணி இரண்டாம் சுற்றில்.

கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஓரா அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாம் போட்டியில் கொழும்பு ஸ்டார்ட்ஸ் அணி இலகுவான வெற்றியினை பதிவு செய்துள்ளது. தம்புள்ள அணி அடைந்துள்ள மோசமான தோல்வி அவர்களுக்கான வாய்ப்பை குறைத்துள்ளது. இருப்பினும் முழுமையாக இழக்கவில்லை. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கொழும்பு, அல்லது காலி அணிகள் மீதமுள்ள சகல போட்டிகளிலும் தோல்வியடைந்தால் தம்புள்ள அணிக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

தம்புள்ள அணியின் தோல்வியின் காரணமாக யாழ் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. அடுத்த சுற்றுக்கு தெரிவாக கொழும்பு அணிக்கு ஒரு வெற்றியும், காலி அணிக்கு இரண்டு வெற்றிகளும் தேவைப்படுகின்றன. தம்புள்ள அணி மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைந்தால் தற்போதுள்ள நிலையிலேயே அந்த இரு அணிகளும் வாய்ப்புகளை பெற முடியும்.

இன்றைய போட்டியில் 90 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கொழும்பு அணி 11.3 ஓவர்களில் 01 விக்கெட்டை இழந்து 09 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இதில் டிக்வெல்ல முதல் பந்திலேயே ஆட்டமிழந்த போதும் டினேஷ் சந்திமால், சரித் அசலங்க இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி வெற்றியினை இலகுவாக்கினார்கள்.

முன்னதாக தம்புள்ள அணி துடிப்பாடிய வேளையில் கஸூன் ரஜிதவின் அபாரமான ஐந்து விக்கெட் பெறுதி தம்புள்ளை அணியினை சிக்கலுக்கு உள்ளாக்கியது. ஆரம்பம் முதலே கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைய விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறி போனது தம்புள்ள அணி. துடுப்பாட்டத்தில் எவரும் சுட்டிக்காட்டுமளவுக்கு சிறப்பாக துடுப்பாடவில்லை.

தம்புள்ள அணி 13.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிரோஷன் டிக்வெல்லBowledப்ரமோட் மதுஷான்000100
டினேஷ் சந்திமால்  303130
சரித் அசலங்க  583554
       
       
அஞ்சலோ மத்தியூஸ்      
சீக்குகே பிரசன்ன      
டொமினிக் ட்ரேக்ஸ்      
பென்னி ஹோவல்      
கஸூன் ரஜித      
       
உதிரிகள்  01   
ஓவர்  11.3விக்கெட்  01மொத்தம்90   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ப்ரமோட் மதுஷான்02010301
போல் வன் மீகெறன்02002400
நூர் அஹமட்3.3002300
லஹிரு குமார02000800
சத்துரங்க டி சில்வா01001100

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
லசித் க்ரூஸ்புள்ளேBowledகஸூன் ரஜித000100
ஷெவான் டானியல்L.B.Wகஸூன் ரஜித000300
ஜோர்டான் கொக்ஸ்பிடி – சுரங்க லக்மால்கஸூன் ரஜித160930
பானுக்கா ராஜபக்ஷபிடி – டினேஷ் சந்திமால்சுரங்க லக்மால்040110
ரொம் அபெல்Bowledகஸூன் ரஜித000200
தஸூன் சாணக்கபிடி – அன்றே பிளட்சர்ஜெப்ரி வண்டர்சாய்201122
நூர் அஹமட்பிடி – நவோட் பரணவித்தாரனஜெப்ரி வண்டர்சாய்020400
சத்துரங்க டி சில்வாRun Out 111110
போல் வன் மீகெறன்பிடி – ரவி போபராகஸூன் ரஜித000600
ப்ரமோட் மதுஷான்பிடி – சாமிக்க கருணாரட்டன 232630
லஹிரு குமாரBowledஹரீம் ஜனட்01060 
உதிரிகள்  12   
ஓவர்  13.5விக்கெட்  10மொத்தம்89   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
கஸூன் ரஜித04002205
சுரங்க லக்மால்03003303
ஜெப்ரி வண்டர்சாய்04001002
ஹரீம் ஜனட்2.5002001
கொழும்பு அணிக்கு இலகு வெற்றி. யாழ் அணி இரண்டாம் சுற்றில்.

Social Share

Leave a Reply