மும்பை வெளியேறும் அபாயம். ராஜஸ்தானுக்கு தொடரும் வாய்ப்பு

ஐ.பி.எல் கிறிக்கெட் தொடரில் நேற்றைய முதற் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தமையினால் அடுத்த சுற்றுக்கு தகுதி பேறும் வாய்ப்பை இழக்கும் நிலையிலுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவ் 33(26) ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் அவிஷ் கான் 3(4-15) விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 3(4-21) விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது. டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் ஆட்டமிழக்காமல் ஷ்ரேயஸ் ஐயர் 33(33) ஓட்டங்களை பெற்றார்.

இரண்டாவது போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ் கைகுவாட் 101(60) ஓட்டங்களை பெற்றார். இது அவரின் முதல் சதமாகும். ரவீந்திர ஜடேஜா 32(15) ஓட்டங்களையும், பாப் டு பிளெஸ்ஸிஸ் 25(19) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ராகுல் தேவாட்டியா 3(4-39) விக்கெட்களை கைப்பற்றினார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 17.3 ஓவராக்களில் 3 விக்கெட்களை 190 ஓட்டங்களை பெற்றது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சிவம் துபே ஆட்டமிழக்காமல் 64(42) ஓட்டங்களையும், ஜஸாவி ஜெய்ஸ்வால் 50(20) ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 28(24) ஓட்டங்களையும், எவின் லுவிஸ் 27(12) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சர்தூள் தாகூர் 2(4-30) விக்கெட்களை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் 12 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியின் நாயகனாக ருத்ராஜ் கைகுவாட் தெரிவு செய்யப்பட்டார்.

இன்று (03/10/2021) பிற்பகல் 3:30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. மாலை 7:30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைட்ரபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

வி.பிரவிக்
தரம் 03

மும்பை வெளியேறும் அபாயம். ராஜஸ்தானுக்கு தொடரும் வாய்ப்பு

Social Share

Leave a Reply