வவுனியா வைத்திய சாலையினை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் குழுவினரால் சிரமதானம் ஒன்று மேற்கொள்ளபப்ட்டுள்ளது. வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியேயே இவ்வாறு சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தனின் ஏற்பாட்டில் அந்த கட்சியின் இளைஞர்கள் இந்த சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிரமதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர் நிரேஷ் உட்பட மேலும் சில இளைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சுத்தம் செய்யப்பட்ட குப்பைகளை அகற்ற நகரசபை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
வவுனியா வைத்தியசாலை உழவு இயந்திரங்களும் வழங்கப்பட்டதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் நிலக்சன் தெரிவித்தார்.