டிசமபர் மாதம் ஆரம்பித்து முதல் 13 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை 30,000 ஐ தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையோடு 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த பயணிகளது எண்ணிக்கை 658,210 ஆக உயர்ந்துள்ளது. இந்த வருடம் 800,000 பயணிகள் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்ற இலக்கு காணப்படுகிறது. அதனை தொட இன்னும் 17 நாட்களில் 141,790 பயணிகள் வருகை தரவேண்டும். இந்த இலக்கை எட்ட ஒரு நாளைக்கு 8,000 இற்கும் அதிகமான பயணிகள் வருகை தரவேண்டும்.
டிசமபர் மாதத்தின் முதல் 2 வாரங்களில் 30,193 பயணிகள் வருகை தந்துள்ளார்கள். முதல் வாரத்தில் 16,169 பயணிகளும், அடுத்த 6 நாட்களில் 14,024 பயணிக்களும் வருகை தந்துள்ளார். இது ஒரு நாளைக்கு 2,322 பயணிகள் என்ற சராசரியினை கொணடுள்ளது.
டிசமபர் மாதத்தில் வருகை தந்துள்ளவர்களில் 21 சதவீதமானவர்கள் ரஸ்சியாவை சேர்ந்தார்கள். 18 சதவீதமானவர்கள் இந்தியர்களாகவும், 9 சதவீதத்தினர் இங்கிலத்தில் இருந்தும் வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதரம் மீள வேண்டுமாக இருந்தால் சுற்றுலா பயணிகளது வருகை அதிகரிக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக அந்த அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இலங்கையின் நிலைமைகள் சுமூக நிலைமைக்கு திரும்பியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளது வருகை அதிகரித்து வருகிறது.