ஜப்னா கிங்ஸ் மற்றும், கோல் க்ளாடியேற்றஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் யாழ் அணி பலமான நிலையில் துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது.
கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது.
யாழ் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். குறிப்பாக அபிப் ஹொசைன் நல்ல முறையில் துடுப்பாடி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.
சாதீர சமரவிக்ரம தொடர்ச்சியாக ஓட்டங்களை பெற்று வருகின்றார். திசர பெரேரா அதிரடியாக அடித்தாடி ஓட்டங்களை இன்றும் உயர்த்தினார்.
காலி அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகத நிலையில் பலமான யாழ் அணியினை வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியும் என்ற நிலையில் இந்த கடின இலக்கை பெற போராடவேண்டிய நிலை ஏற்படும்.
யாழ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் அவர்களுக்கு இரண்டாம் இடம் முழுமையாக உறுதியாகிவிடும் என்ற நிலை காணப்படுகிறது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரஹ்மனுள்ள குர்பாஸ் | பிடி – இமாட் வசீம் | நுவான் துஷார | 23 | 19 | 3 | 1 |
| அவிஷ்க பெர்னாண்டோ | பிடி – இப்திகார் அஹமட் | நுவான் பிரதீப் | 18 | 15 | 2 | 1 |
| அபிப் ஹொசைன் | பிடி – – இப்திகார் அஹமட் | நுவான் துஷார | 43 | 27 | 4 | 1 |
| சதீர சமரவிக்ரம | பிடி – தனுக்க டபாரே | வஹாப் ரியாஸ் | 32 | 28 | 2 | 0 |
| சொஹைப் மலிக் | Hit Wicket | வஹாப் ரியாஸ் | 00 | 01 | 0 | 0 |
| திசர பெரேரா | பிடி – நுவனிது பெர்னாண்டோ | வஹாப் ரியாஸ் | 26 | 13 | 4 | 0 |
| ஜேம்ஸ் புல்லர் | Run Out | 02 | 04 | 0 | 0 | |
| டுனித் வெல்லாளகே | Run Out | 05 | 02 | 1 | 0 | |
| மஹீஸ் தீக்ஷண | 10 | 08 | 0 | 0 | ||
| விஜயகாந்த விஜயஸ்காந் | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 170 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| இமாட் வசீம் | 03 | 00 | 18 | 00 |
| நுவான் துஷார | 04 | 00 | 31 | 02 |
| வஹாப் ரியாஸ் | 04 | 00 | 37 | 03 |
| நுவான் பிரதீப் | 03 | 00 | 32 | 01 |
| இப்திகார் அஹமட் | 03 | 00 | 22 | 02 |
| லக்ஷன் சன்டகன் | 03 | 00 | 29 | 00 |
