லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கொழும்பு ஸ்டார்ஸ், ]கோல் க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான வெளியேற்றும் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி கண்டி பல்கொன்ஸ் அணியுடன் இரண்டாம் தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது.
மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாகவே ஆரம்பித்தது. அதன் காரணமாக 18 ஓவர்களடங்கிய போட்டியாக இந்தப் போட்டி மாற்றபப்ட்டுள்ளது. கண்டி, யாழ் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டு டக் வேர்த் லூயிஸ் முறைப்படியே யாழ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
அணி விபரம்
கொழும்பு ஸ்டார்ஸ்
அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், நிஷான் மதுசங்க, சரித் அசலங்க, ரவி போபரா, கரீம் ஜனட், ரவி போபரா, மொஹமட் நபி, டொமினிக் ட்ரேக்ஸ், சுரங்க லக்மால், ஜப்ரி வண்டர்சி, பென்னி ஹோவெல், கஸூன் ரஜித்த
கோல் கிளாடியேட்டர்ஸ்
குஷல் மென்டிஸ், ஆஷாட் ஷபிக், நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே லஹிரு உதான, இப்திகார் அஹமட், இமாட் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், லக்ஷன் சன்டகன், அஸாம் கான்
