லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கொழும்பு ஸ்டார்ஸ், கோல் க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான வெளியேற்றும் போட்டியில் 07 விக்கெட்களினால் வெற்றி பெற்ற கொழும்பு அணி இரண்டாம் தெரிவுகாண் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 16.5 ஓவர்களில் 109 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கொழும்பு அணி 17 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றது.
கொழும்பின் சராசரியான ஆரம்பமும், காலி அணியின் குறைவான ஓட்டங்களும் கொழும்பு அணி வெற்றியினை பெற உதவியது. மூன்று விக்கெட்களை சம இடைவெளிகளில் கொழும்பு அணி இழந்த போதும் அஞ்சலோ மத்தியூஸ், ரவி போபரா ஆகியோர் தமது அனுபவத்தை பாவித்து நிதானமாக போட்டியினை எடுத்து சென்றனர். பந்துகளிலும் பார்க்க ஓட்டங்கள் வித்தியாசம் அதிகரித்த போதும் இறுதி வரை எடுத்து சென்று வேகமாக அடித்தாடி போட்டியினை நிறைவு செய்தனர். அரைச்சத இணைப்பாட்டத்தையும் பூர்த்தி செய்தனர்.
கொழும்பு, கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி நாளை(22.12) இரண்டாம் தெரிவுகாண் போட்டி நடைபெறவுள்ளது.
காலி அணி நான்காவது இடத்தில் இந்த தொடரை நிறைவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய காலி அணி தடுமாறி 18 ஓவர்களில் 09 விக்கெட்களை 109 இழந்து ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆரம்பம் முதலே ஓட்டங்களை பெற தடுமாறி வந்த காலி அணி விக்கெட்களையும் இழக்க மோசமாக தடுமாறியது. சஹான் ஆராச்சிகே மாத்திரம் மத்திய வரிசையில் அரைச்சதம் அடித்து ஓரளவு அணியை காப்பாற்றி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் மொஹமட் நபி இறுக்கமாக பந்துவீசினார். ஓட்டங்களை அதிமாக வழங்காமல் விக்கெட்களையும் கைப்பற்றினார். கஸூன் ரஜித்த சிறப்பாக ஆரம்பித்து நிறைவு செய்தும் கொடுத்தார்.
கொழும்பு அணி இந்த இலக்கினை இலகுவாக பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணபடுகின்றன.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி கண்டி பல்கொன்ஸ் அணியுடன் இரண்டாம் தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது.
மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாகவே ஆரம்பித்தது. அதன் காரணமாக 18 ஓவர்களடங்கிய போட்டியாக இந்தப் போட்டி மாற்றபப்ட்டது. கண்டி, யாழ் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டு டக் வேர்த் லூயிஸ் முறைப்படியே யாழ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
அணி விபரம்
கொழும்பு ஸ்டார்ஸ்
அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், நிஷான் மதுசங்க, சரித் அசலங்க, ரவி போபரா, ரவி போபரா, மொஹமட் நபி, டொமினிக் ட்ரேக்ஸ், சுரங்க லக்மால், ஜப்ரி வண்டர்சி, பென்னி ஹோவெல், கஸூன் ரஜித்த
கோல் கிளாடியேட்டர்ஸ்
குஷல் மென்டிஸ், ஆஷாட் ஷபிக், நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே லஹிரு உதான, இப்திகார் அஹமட், இமாட் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், லக்ஷன் சன்டகன்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| டினேஷ் சந்திமால் | பிடி –லக்ஷன் சன்டகன் | நுவான் பிரதீப் | 13 | 08 | 1 | 1 |
| நிஷான் மதுசங்க | பிடி – நுவனிது பெர்னாண்டோ | சொஹைப் மலிக் | 13 | 27 | 2 | 0 |
| சரித் அசலங்க | Run Out | 10 | 14 | 1 | 0 | |
| ரவி போபரா | 43 | 28 | 6 | 0 | ||
| அஞ்சலோ மத்தியூஸ், | 20 | 25 | 2 | 0 | ||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர் 16.5 | விக்கெட் 03 | மொத்தம் | 109 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நுவான் பிரதீப் | 03 | 00 | 21 | 01 |
| நுவான் துஷார | 03 | 00 | 23 | 00 |
| வஹாப் ரியாஸ் | 04 | 00 | 22 | 01 |
| இமாட் வசீம் | 3.5 | 00 | 26 | 00 |
| லக்ஷன் சன்டகன் | 03 | 00 | 18 | 00 |
| 04 | 00 | 29 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஆஷாட் ஷபிக் | பிடி – அஞ்சலோ மத்தியூஸ் | கஸூன் ரஜித்த | 04 | 07 | 0 | 0 |
| குசல் மென்டிஸ் | பிடி – நிஷான் மதுசங்க | மொஹமட் நபி | 04 | 14 | 0 | 0 |
| லஹிரு உதார | பிடி – சுரங்க லக்மால் | டொமினிக் ட்ரேக்ஸ் | 06 | 13 | 0 | 0 |
| சஹான் ஆராச்சிகே | பிடி – சரித் அசலங்க | பென்னி ஹோவெல் | 53 | 31 | 3 | 3 |
| நுவனிது பெர்னாண்டோ | பிடி – சரித் அசலங்க | மொஹமட் நபி | 08 | 10 | 0 | 0 |
| இப்திகார் அஹமட், | பிடி – மொஹமட் நபி | சுரங்க லக்மால் | 05 | 10 | 0 | 0 |
| இமாட் வசீம் | பிடி – சரித் அசலங்க | பென்னி ஹோவெல் | 17 | 15 | 2 | 0 |
| வஹாப் ரியாஸ் | Bowled | பென்னி ஹோவெல் | 02 | 04 | 0 | 0 |
| லக்ஷன் சன்டகன் | Bowled | கஸூன் ரஜித்த | 01 | 03 | 0 | 0 |
| நுவான் பிரதீப் | 00 | 01 | 0 | 0 | ||
| நுவான் துஷார | 02 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 05 | |||||
| ஓவர் 18 | விக்கெட் 09 | மொத்தம் | 108 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கஸூன் ரஜித்த | 04 | 01 | 09 | 02 |
| சுரங்க லக்மால் | 04 | 00 | 27 | 01 |
| மொஹமட் நபி | 04 | 00 | 20 | 02 |
| டொமினிக் ட்ரேக்ஸ் | 03 | 00 | 21 | 01 |
| ஜப்ரி வண்டர்சி | 01 | 00 | 13 | 00 |
| பென்னி ஹோவெல் | 01 | 00 | 08 | 02 |
