ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கலைஞர்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் செயற்பாடு கடந்த 01ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இருபத்தைந்து கலைஞர்களுக்கான உலருணவுப் பொதிகள் இன்று காலை ஒன்பது மணிக்கு யாழ் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வினை யாழ்ப்பாண பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலர் ஆரம்பித்து வைத்தரார்.
இந்த நிகழ்வில் ஸ்வஸ்திக் நுண்கலைக்கல்லூரியின் தலைவி திருமதி கீதாஞ்சலி செயலாளர் திரு.சுதர்சன் ஆகியோருடன் நுண்கலைக்கல்லூரி மற்றும் திரைப்படக்கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தன்னார்வ தொண்டு அடிப்படையில் இன்று ஆரம்பித்து வைத்த இந்த செயற்றிட்டத்திற்கு நீலன்திருச்செல்வம் நம்பிக்கை நிதியம் நிதிப்பங்களிப்பினை வழங்கி இருந்தது. இந்த செயற்றிட்டம் வடமாகாணம் முழுவதும் பதினைந்து பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.
500 கலைஞர்கள் இந்த செயற் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர்.