பாடசாலைகளில் ஜனனம் உதவியுடன் ரெக்போல் அறிமுகம்

இலங்கையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விளையாட்டான ரெக்போல்(Teqball) விளையாட்டை பாடசாலைகளுக்கு அறிமுகம் செய்வதற்கான செயலமர்வு அண்மையில் நடைபெற்றது.

ரெக்போல் சம்மேளனத்தினால் இலங்கையில் பரிபாலனம் செய்யப்படும் இந்த விளையாட்டை இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்துடன் இணைந்து ஜனனம் அறக்கட்டளை நிறுவகம் பாடசாலைகளுக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் முதற்கட்டமாக கொழும்பு பாடசாலை அதிபர்கள் மற்றும் உடற்கல்வி பொறுப்பாரியர்களுக்கான அறிமுக செயலமரவே இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் ரெக்போல் சம்மேளனத்தின் தலைவர் கோபிநாத், ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொருளாளர் காமினி ஜயசிங்க, ஜனனம் அறக்கட்டளை நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

“இன்று நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மாணவர்கள் தவறான பாதைகள் நோக்கி செல்வதாக அறியமுடிகின்றது. இந்த பாதகமான சூழ்நிலையில் இருந்து மாணவர்களை வெளிக்கொண்டுவருவதற்கு விளையாட்டு மிக முக்கிய கருவியாகும்.

ஆகவே ஜனனம் அறக்கட்டளை, இலங்கை Olympic உடன் இணைந்து Teqball என்னும் விளையாட்டினை பாடசாலைகள் மட்டத்தில் அறிமுகப்படுத்தும் செயல் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இந்த விளையாட்டுக்குத் தேவையான பிரத்தியேக மேசை மற்றும் பிற உபகரணங்களை அப்பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு ஜனனம் அறக்கட்டளை உரிய விடயங்களை செய்யும்” என ஜனனம் அறக்கட்டளை தலைவர் குறித்த செயலமர்வில் தெரிவித்தார்.

பாடசாலைகளில் ஜனனம் உதவியுடன் ரெக்போல் அறிமுகம்

Social Share

Leave a Reply