மத்தளவிலிருந்து ரஷ்ய விமான சேவைகள் ஆரம்பம்!

ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து 398 பயணிகளுடன் ரஷ்ய விமானம் ஒன்று இன்று (29.12) காலை 9.42 மணியளவில் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

ரஷ்யாவின் ‘ரெட்விங்ஸ்’ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் இன்று முதல் வாரத்திற்கு இரண்டு முறை மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் விமான நிலைய வளாகத்தில் விசேட குறும்பட விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ‘ரெட்விங்ஸ் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் துணை வர்த்தக பணிப்பாளர் மெரினா புசினா, “இன்று எங்களை அன்புடன் வரவேற்றீர்கள். அதற்கு முதலில் நன்றி கூறுகிறேன். இந்த விமான நிலையத்தினூடாக மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.
இதன் மூலம் இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான உறவு மேலும் வலுவடைந்ததுள்ளது. எதிர்காலத்தில் எங்கள் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் மூலம் வாரத்திற்கு இரண்டு முறை சேவைகளை முன்னெடுக்க நாம் காத்திருக்கின்றோம். மத்தள விமான நிலையத்தில் இருந்து ரெட்விங்ஸ் விமானத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

“ரெட்விங்ஸ் ஏர்லைன்ஸ் ரஷ்யாவிற்கும் மத்தளவிற்கும் இடையே 3 நேரடி விமான பயணங்களை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் ரஷ்ய சுற்றுலா பயணிகள் மற்றும் இலங்கையில் இருந்து ரஷ்யா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உள்ள அவர்கள் விரும்பும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கான தேவையான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2021ம் ஆண்டுக்கு பின்னரே மத்தள விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்துள்ளமை விசேடம்சமாகும்.

மத்தளவிலிருந்து ரஷ்ய விமான சேவைகள் ஆரம்பம்! மத்தளவிலிருந்து ரஷ்ய விமான சேவைகள் ஆரம்பம்!

மத்தளவிலிருந்து ரஷ்ய விமான சேவைகள் ஆரம்பம்!

Social Share

Leave a Reply