வியாஸ்காந்துக்கு BPL விளையாட அனுமதி!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. இன்று (02.01.2023) மாலை இலங்கை கிரிக்கெட் இந்த அனுமதியினை வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.

தேசிய ரீதியில் விளையாடுவதற்கான ஒப்பந்தமுள்ள வீரர்களுக்கு மட்டுமே இலங்கை கிரிக்கெட் இந்த அனுமதியினை வழங்கியுள்ளது. உள்ளூர் போட்டி தொடரான தேசிய சுப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

வியாஸ்காந்தும் இந்த உள்ளூர் தொடரில் பங்குபற்ற வேண்டிய நிலை காணப்படுகிறபோதும், அவரின் திறமையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தேசிய சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சிகள் ஆரம்பித்துள்ளன.

இந்து வாய்ப்பின் மூலம் வியாஸ்காந்தின் திறமை மேலும் சர்வதேச ரீதியில் வெளிப்படும் என நம்பப்படுகிறது. இன்னமும் இரு தினங்களில் அவர் பங்களாதேஷ் பயணிக்கவுள்ளார்.

அரசியல் காரணங்கள் மற்றும் இன அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றார் என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்தும் பகிரப்படும் நிலையில் இலங்கை கிரிக்கெட் இந்த அனுமதியினை வழங்கியிருப்பது அந்த கருத்துக்களை பொய்ப்பித்திருப்பதாக பெயரை வெளியிட விரும்பாத முக்கியஸ்தர் ஒருவர் கருத்து கூறியுள்ளார்.

வியாஸ்காந்த் சட்டகிராம் சலஞ்சேர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

வியாஸ்காந்துக்கு BPL விளையாட அனுமதி!

Social Share

Leave a Reply