முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை (05.01) தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்டின் உடல் நாளை வத்திக்கானில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.