தேர்தல் பிரச்சாரத்தில் நான் கலந்துகொள்ள போவதில்லை – ஜனாதிபதி

இந்த ஆண்டு இடம்பெறவுளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான எந்தப் பிரச்சாரத்திலும் தாம் பங்கேற்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் தாம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டது, தேர்தலில் ஈடுபடுவதற்காக அல்ல என்றும், சிதைந்து போன பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்பும் பொறுப்பே முதன்மையானது என்றும் இந்த கொள்கையை மீறி தம்மால் செயலாற்ற முடியாது எனவும், UNP அங்கத்தவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டங்களுக்கு மாத்திரமே தலைமை தாங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 40 வீதமான புதிய முகங்களை ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கினால் நல்லது என தாம் பரிந்துரைப்பதாகவும்,
அத்துடன் இந்த வருடம் 4000 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் நான் கலந்துகொள்ள போவதில்லை - ஜனாதிபதி

Social Share

Leave a Reply