கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு, அதன் பக்க விளைவுகளாக அல்லது அதன் பின்னரான உடல் மாற்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உடற் சோர்வு, மனஅழுத்தம், ஞாபக மறதி, நெஞ்சு வலி, தொண்டை வலி, வயிற்றுவலி, சுவாசத்தில் சிரமம், தலைவலி, தசை வலி, போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக ஸ்ரீஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்த நோய்கள் அல்லது அறிகுறிகள் 3 தொடக்கம் 6 மாதங்கள் வரையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
