செலவுக்கு ஏற்றதான சூத்திர அடிப்படையிலான மின்சார கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகமொன்று தகவல்களை அடிப்படையாக வைத்து செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான திகதி ஒன்று முடிவெடுக்கப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இந்த மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகள் பெறப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் ஜனவரி முதல் பொது மின்சார பொது கொள்கை வழிகாட்டுதல்கள் தொடர்பிலான மாற்றங்களுக்கும், மின் கட்டண அதிகரிப்புக்கும் அனுமதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்
