வவுனியா தாண்டிக்குளம், ஈச்சங்குளம் வீதியில் வயல் வெளி பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று(10.01) அதிகாலை பொதுமக்களினால் இனம் காணப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் என இனம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீதி வளைவில் மோட்டார் சைக்கிளோடு சடலம் காணப்பட்ட நிலையில் விபத்து காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சடலம் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த சம்பம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
