எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்கடிக்கப்படும் என தாம் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவ்வாறே தோற்கடிக்கப்பட்டாலும் தாம் தோல்வியை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்றும், தோற்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே எப்போது, எங்கே தவறு செய்தோம் என்பதை சிந்தித்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரால், கட்சி மற்றும் மக்களை விட்டு ஒருபோதும் விலகி செல்ல முடியாது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.