முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மேல் மாகாண முதலமைச்சரும், முன்னாள் வட மாகாண, மத்திய மாகாண ஆளுநரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவருமான ரெஜினோல்ட் குரே மாரடைப்பு காரணமாக நேற்று(13.01) களுத்துறை வைத்தியசாலையில் மரணமானர்.

வாதுவயில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற வாக்காளர் தெரிவின் போது மாரடைப்பு ஏற்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், களுத்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

1947 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றினார். 1994 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் களுத்துறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். 2016 ஆம் ஆண்டு வட மாகாண ஆளுநராகவும், 2018 ஆம் ஆண்டு மத்திய மாகாண ஆளுநராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

Social Share

Leave a Reply