பிலியந்தலையில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் விசாரணை!

பிலியந்தலையைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையை சேர்ந்த மாலுமி ஒருவரால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிலியந்தலை, பெலன்வத்தையைச் சேர்ந்த பெண்ணை,  சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் கடந்த சனிக்கிழமை கடத்திச் சென்றதாக, பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணமான ஒருவரான மதவாச்சியை சேர்ந்த சந்தேக நபர், குறித்த பெண்ணுடன் தகாத உறவை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
எனினும் சந்தேக நபருடனான தொடர்பை அந்த பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் முறித்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில்,  எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
பிலியந்தலையில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் விசாரணை!

Social Share

Leave a Reply