தமிழர் விடுதலை கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக பழனி ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ்ப்பாணம் தலைமையகத்தில் வைத்து கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவருக்கான நியமன கடிதத்தினை வழங்கி வைத்தார்.
தமிழர் விடுதலை கூட்டணி கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய பிரேதசசபைகளில் போட்டியிடவுள்ளதாக பழனி ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெற்றி வாய்புள்ள இடங்களில் மட்டுமே தாம் போட்டியிடுவதாக தமிழர் விடுதலை கூட்டணி அறிவித்துள்ள நிலையில் கிளிநொச்சியில் தாம் பலமாக களமிறங்குவதாக பழனி ஜெகதீஸ்வரன் கூறியுள்ளார்.
