லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் அண்மையில் வெளியானதை தொடர்ந்து தற்போது சுப்பர்ஸ்டார் ரஜனிகாந்துடன் நடித்துள்ள அண்ணாத்தா திரைப்படமும் தீபாவளியன்று ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவுடன் காத்துவாக்கில இரண்டு காதல் மற்றும் ஷாருகானுடன் லயன் திரைப்படங்களில் நடித்து வருகின்றார் நயன்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இணைந்து நிறுவியுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கவின் மற்றும் வாணிபோஜன் நடிக்கவுள்ள திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கவின் நடிப்பில் அண்மையில் வெளியாகிய லிப்ற் திரைப்படத்தினையடுத்தே கவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இத் திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளதுடன் இத்திரைப்படத்தில் நயன்தாரா சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத் திரைப்படம் தொடர்பான தகவல்கள் வெகுவிரைவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவனினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.