மற்றுமொரு பேருந்து கவிழ்ந்து விபத்து!

மடுல்கலே ஊடாக பன்வில நோக்கி பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (20.01) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் போது பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 16 பெண்களும் நான்கு ஆண்களும் காயமடைந்து மடுல்கலே பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
மேலும், 07 பெண்களும் ஆண் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தின் பிரேக் பழுதடைந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றுமொரு பேருந்து கவிழ்ந்து விபத்து!
மற்றுமொரு பேருந்து கவிழ்ந்து விபத்து!

Social Share

Leave a Reply