நியூசிலாந்தை உருட்டி எடுத்த இந்தியா

நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இன்று (21.01.2023) ரைப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி பந்துவீச்சினால் இலகுவான வெற்றியினை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியியல் வெற்றி பெற்ற இந்தியா அணி தெரிவு செய்தது

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றது. இதில் க்ளென் ப்ளிப்ஸ் 36(52) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மொஹமட் ஷமி 3 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா, வஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ், ஷார்டூல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 51(50) ஓட்டங்களையும், ஷுப்மன் கில் ஓட்டங்களையும், பெற்றனர். பந்துவீச்சில்
மிச்சல் சண்டனர், ஹென்றி ஷிப்லி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்தை உருட்டி எடுத்த இந்தியா
நியூசிலாந்தை உருட்டி எடுத்த இந்தியா

Social Share

Leave a Reply