12.5 கிலோ சிலிண்டர் உள்ளிட்ட, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலை 500 ரூபா முதல் 750 ரூபா வரையில் அதிகரிக்க கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 5 கிலோ சிலிண்டர் மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த விலை திருத்தம் எதிர்வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என்றும், உலக சந்தையில் ஏற்படும் விலை உயர்வுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

