பரீட்சை கால மின்வெட்டு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கை!

க.பொ.த உயர்தரத் பரீட்சைகள் நடைபெறும், ஜனவரி 23ம் திகதி முதல் பிப்ரவரி 17ம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு நேரத்தை எந்த நேரத்திலும் திட்டமிடுவதைத் தவிர்க்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் தங்களது கல்வி உரிமையை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் நிலவும் மின்வெட்டு அட்டவணை குறித்த அண்மைக்காலச் செய்திகளைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply