கம்பளையில் உள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கம்பளை – கண்டி பிரதான வீதியில் உள்ள தனியார் வங்கியொன்றின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM) நேற்றிரவு சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்த நான்கு பேர் வேனில் வந்து, வங்கியில் இருந்த காவலாளியை கட்டி வைத்துவிட்டு (ATM) இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

