உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்தடை இல்லை!

இன்று முதல் உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரம் தடைப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூடிய தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 23ம் திகதி முதல் பெப்ரவரி 17ம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

A/L பரீட்சையின் போது மின்சார உற்பத்திக்காக தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் (PUCSL) உடன்பாட்டுக்கு வந்துள்ளது.

முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தத்தில், மின் உற்பத்திக்குத் தேவையான செலவை ஈடுகட்டுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு PUCSL, இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, உரிய பணத்தை 60 நாட்களுக்குள் செலுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதன்படி பரீட்சை காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்தடை இல்லை!
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்தடை இல்லை!

Social Share

Leave a Reply