மருந்து தட்டுப்பாடு தொடர்பில் WHOஇல் முறைப்பாடு!

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (26.01) அவர்கள் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கறுப்பு வாரத்துடன் இணைந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் WHOஇல் முறைப்பாடு!

Social Share

Leave a Reply