மணமகனின் காதை கடித்து துப்பிய மணமகள்

கண்டி, கம்பொலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் ‘குத்து சண்டை வீரர் மைக் டைசன் பாணியில்’ மணமகனின் காதை மணமகள் கடித்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட இருவரையும் மீண்டும் சேர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

7 வருடமாக காதலித்து வந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்று அண்மையில் திருமணம் செய்து தங்களது தேன்நிலவை நிறைவு செய்து வந்துள்ளார்கள். அந்த நேரத்தில் மணமகன் தனது நண்பருடன் பியர் அருந்திவிட்டு வந்தமையினால் சுபநேரத்துக்கு 1/2 மணி நேரம் தாமதமானதனால் பொறுமை இழந்த மணப்பெண் காதை கடித்தில் ஒரு சிறு துண்டு அவரின் வாயோடு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மணமகனின் காதை கடித்த மணப்பெண் மாற்று மோதிரத்தை கழற்றி வீசி, இத்துடன் அனைத்தும் முடிந்தது என சைகை காட்டிவிட்டு சென்றுள்ளார். மணமகனின் சகோதரியினை தாக்கியோதோடு, அவரின் பெற்றோரையும் மோசமான வார்த்தைகளினால் திட்டியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவசர தொடர்பு இலக்கம் மூலமாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மணமகனின் காதை கடித்து துப்பிய மணமகள்

Social Share

Leave a Reply