பாராளுமன்றத்தை பெப்ரவரி 08 ஆம் திகதி வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும் தினத்தில் ஜனாதிபதி விசேட கொள்கை அறிக்கை ஒன்றினை பாரளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
