கொழும்பில் சில பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்!

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அதன் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (28.01), நாளை (29.01) மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் சுதந்திர தினம் வரையான காலப்பகுதியில், அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் மத்திய வீதி – காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து என். எஸ். ஏ. சுற்றுவட்டம் வரை மற்றும் சைத்திய வீதி பிரதேசம், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் நோக்கி திரும்பும் கொள்ளுப்பிட்டி புகையிரத வீதிக்கு உள்நுழையும் வீதி ஆகிய பாதைகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த காலப்பகுதியில் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலைய வீதியை நோக்கிய சுற்றுவட்டம் மற்றும் சைத்திய வீதி பகுதிக்கான பிரவேசம் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செராமிக் கூட்டு இருந்து என். எஸ். ஏ. பாதை குறித்த காலப்பகுதியில் சுற்றுவட்டாரத்தை நோக்கி வாகனங்கள் செல்வது மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த நாட்களில், ஒத்திகை மற்றும் சுதந்திர தின நிகழ்வுகளின்போது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

கொழும்பில் சில பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்!

Social Share

Leave a Reply