“டிஸ்கோ” கைது செய்யப்பட்டுள்ளார்!

“டிஸ்கோ” என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா என்ற பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் பெண் ஒருவர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய அவரிடமிருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபருக்கும், தற்போது பிரான்சில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளிடன் தொடர்புடைய “ரூபன்” என்ற ஒருவருடன் நேரடி தொடர்பில் இருப்பதும் இங்கு போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த பெண் நேற்று (29.01) கொழும்பு 15, முகத்துவாரம், கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

"டிஸ்கோ" கைது செய்யப்பட்டுள்ளார்!

Social Share

Leave a Reply